science

img

செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட களிமண்ணில் தாதுப் பொருட்கள் இருப்பதாக நாசா தகவல்

செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட களிமண்ணில் தாதுப் பொருட்கள் அதிக அளவில் இருப்பதாக அமெரிக்க விண்வெளி மையமான நாசா தகவல் தெரிவித்துள்ளது.கடந்த 2012-ஆம் ஆண்டு, செவ்வாய் கிரகத்தில் தறையிறக்கப்பட்ட  கியூரியாசிட்டி என்ற ரோவர், அங்கு ஊர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில், களிமண் கண்டறியப்பட்ட பகுதியில், ’ஏபர்லேடி’ மற்றும் ’கில்மரி’ என்ற பெயரிடப்பட்ட இரு பாறைகளை துளையிட்ட இந்த ரோவர், அதன் புகைப்படங்களை கடந்த மே 12-ஆம் தேதி (2,405வது மார்ஷியன் நாள்) அன்று பூமிக்கு அனுப்பியது. மேலும், இந்த ரோவர் ’மவுண்ட் ஷார்ப்’ என்ற பகுதியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதி உயிரினங்கள் வாழ தகுதியான இடமாக இருந்தனவா என்பதை குறித்து ஆய்வு செய்து வந்தது. 
இந்நிலையில், இந்த ரோவரில் பொருத்தப்பட்டுள்ள ’கெமின்’ என்ற கனிமவியல் கருவி இது குறித்த ஆய்வு தகவல்களை பூமிக்கு அனுப்பியது. அதில் களிமண்ணில் தாதுப் பொருட்கள் அதிக அளவில் இருப்பதாகவும், ஹெமடைட் என்ற  இரும்பு ஆக்சட் தாதுப் பொருள் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது தெரியவந்துள்ளதாக் நாசா தெரிவித்துள்ளது.

;